நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா முனைக்கு அவசர மருந்து, உணவு, குடிநீர் செல்ல அனுமதி

ஜெருசலேம்:

கடந்த 13 நாள்களாக முற்றிலும் முடங்கியுள்ள காசா முனைக்கு மருந்து, உணவு, குடிநீர் மட்டும் அனுமதிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

காயமடைந்த லட்சக்கணக்கானவர்களுக்கு அவசர மருந்து பொருள்கள், உணவு, குடிநீர் இல்லாமல் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் இஸ்ரேல், காசாவின் அனைத்து எல்லைகளையும் மூடி மின்சாரத்தை துண்டித்துள்ளது.

இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு புதன்கிழமை சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டதன்பேரில் எகிப்து வழியாக அவசர உதவி பொருள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

முஸ்லிம் நாடுகள் அனுப்பிய மனிதாபிமான அவசர நிவாரணப் பொருள்கள் அடங்கிய 300 டிரக்குகளை எகிப்து எல்லையில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.

காசா மருத்துமனைகளில் மயக்கு மருந்துகள் கூட இல்லாததால், அப்படியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலும், பாலஸ்தீன மக்களும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ இரு தனி நாடுகள் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்பது அவரது கருத்து என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset