நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவா அண்ணாதுரை யார்?

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிடும் விஞ்ஞானி, சிவா அய்யாதுரை தமிழ் நாட்டின் ராஜபாளையம் , நவமுகவூரை பூர்வீகமாகக் கொண்டவர்.

தந்தை பெயர் வெள்ளையப்பன் நாடார்.

தாயார் மீனாட்சி அம்மாள். இவர் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர்.

சிவா அய்யாதுரை  முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு  மிகவும் நெருக்கமானவர்.

அமெரிக்க குடியரசு கட்சியின் அறிவியல் ஆலோசகராவும் செயல்பட்டார்.

முதன் முதலில் ஈமெயில் - மின்னஞ்சல் கண்டுபிடித்தவர் தான்தான் என்று கூறி காப்பிரைட் சட்டப்படி உரிமை கோரினார்.

ஆனால் இவருக்கு முன்பே மின்னஞ்சல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று கூறி இவரது வாதத்தை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவருடைய  பாட்டி பரம்பரை சித்த வைத்தியர். சிவா தனது பாட்டி மீது கொண்ட அன்பால் தற்போது சித்த மருத்துவத்திற்கு விஞ்ஞான பூர்வமாக வடிவம் கொடுக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.

சிவா 2014 ஆம் ஆண்டு பிரான் ட்ரெஷச்சேர் (Fran Drescher ) என்ற அமெரிக்க நடிகையை திருமணம் செய்தார்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அமெரிக்கர்களின்  ஆதரவை தேடி வருகிறார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset