நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா மக்களுக்காக 100 மில்லியன் டாலர்: பைடன்

காசா: 

காசா மக்களுக்காக, மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த  அறிவிப்பானது, அமெரிக்க அதிபரின் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல், காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் காசா மருத்துவமனை ஒன்றிற்கு தாக்குதல் நடத்தப்பட்டு அதில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் காசா, மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர் உதவியை அறிவித்தேன். 

இந்த பணம் 1 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மற்றும் மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருக்கும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset