நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்:

காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க நினைப்பது இஸ்ரேலின் மிகப் பெரிய தவறாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாலஸ்தீன அதிபரிடம் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமும் பேசினார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'இரு தலைவர்க களுடனான பேச்சுவார்த்தையின்போது போர் விரிவடைந் துவிடாமல் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பைடன் வலியுறுத்தினார்.

காஸா மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி போன்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகள் தொடர்பாக அவர் விவாதித்தார்.

மோதல் விரிவடையாமல் தடுப்பதோடு, மேற்கு கரையில் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பைடன், பயங்கரவாதக் குழு என்ற அடிப்படையில் ஹமாஸ் அமைப்புக்கு அனைத்து நாடு களும் கண்டனம் தெரிவிப்பது முக்கியமென வலியுறுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பைடன் அளித்தப் பேட்டியில்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸை அழிப்பது அவசியம். அதற்காக ஹமாஸ் வசமுள்ள காஸவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset