நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செந்தில் பாலாஜி நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதி 

சென்னை:
 
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி கைது செய்தனா். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஆக. 12-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமாா் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தொடா்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமா்வு நீதிமன்றம் தான், 

ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி ஜாமீன் மனு மீதான விசாரணை செப். 15-இல் நடைபெற்றது.

செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை என இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset