நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு

சென்னை :

ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட தமிழ் ஆய்வாளர் பாலசுப்ரமணி காலமானார். அவருக்கு வயது 60.

வாய்ப்புற்று நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட ஒரிசா பாலு ஆழ்வார் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார்.

ஒரிசா பாலுவின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் சார்ந்த பல தொல்லியல் நூல்களையும் ஒரிசா பாலு எழுதியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல், குமரி கண்டம், லெமூரிய கண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் தொடர்பான ஆய்வுகளில் ஒரிசா பாலு ஈடுபட்டு வந்தார்.

மேலும், இவர் ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழ் மக்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நம்பிகை துவங்கியதிலிருந்து அதனை தவறாமல் வாசித்து வருபவர். நம்பிக்கை காணொலிச் செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்தார். 

நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன் படைத்த நம்பிக்கைப் பெருநாள் ஈகைத் திருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தமிழ் முஸ்லிம்கள் கடலோடிகளாக இருந்தபோது வர்த்தகர்களாக மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள் என்பதை தரவுகளோடு பதிவிட்டார். சிறந்த சமய நல்லிணக்கவாதியும் தமிழ் ஆய்வாளரும் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தாருக்கு நம்பிக்கை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset