நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் திடீர் உடல்நலக்குறைவு; தனியார் மருத்துவமனையில் அனுமதி 

சென்னை: 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அண்ணாமலையைப் பரிசோதித்ததில் அவருக்கு நுரையீரலின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சியுடன் கூடிய வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு உரிய மருந்துகளை வழங்கினர். 

அண்ணாமலை முழுமையாக குணம் அடைய 2 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர் 4-ந் தேதிக்கு பதில் 6-ந் தேதி (நாளை) தொடங்குவதாக இருந்த 3ஆம் கட்ட 'என் மண், என் மக்கள்' யாத்திரை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset