செய்திகள் விளையாட்டு
மலேசியாவின் முதன்மை விளையாட்டு பட்டியலில் கபடி இடம் பெற வேண்டும்: பீட்டர்
கோலாலம்பூர் :
மலேசியாவின் முதன்மை விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெர வேண்டும் மலேசிய கபடிச் சங்கத்தின் செயலாளர் பீட்டர் வலியுறுத்தினார்.
கபடி விளையாட்டு ஒவ்வொரு ஆசிய விளையாட்டிலும் இடம் பெறுகிறது.
அதே வேளையில் அடுத்த தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் கபடி விளையாட்டு இடம் பெற்றுள்ளது.
ஆனால் மலேசியாவில் தற்போது பல போராட்டங்களுக்கு பிறகு கபடி சுக்மா விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தற்போது சீனாவில் நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை மலேசிய கபடி அணி சீனாவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இப்போட்டிக்கு தயாராகும் வகையில் தேசிய விளையாட்டு மன்றம் 80 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கியது.
இந்த நிதியை கொண்டு தான்ன மலேசியா அணி இந்தியாவில் பயிற்சிகளை மேற்கொண்டது.
தற்போது ஆசியப் போட்டிக்கு சென்று வர கிட்டத்தட்ட 110,000 ரிங்கிட் செலவாகிறது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, அவரின் உதவியாளர் அர்விந்த், கியூநெட் நிறுவனம், டெஸ்ட்னி நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பரணி, கேஎல் கோப்தர்ஸ் தலைவர் சசி நாயர் உட்பட பலர் தந்த ஆதரவால் மலேசியா அணி சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறது.
வரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும். கபடி மலேசியாவில் முதன்மை விளையாட்டு பட்டியலில் இடம் பெற்றால் இது போன்ற பிரச்சினைகள் எங்களுக்கு வராது.
ஆகவே இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பீட்டர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து
June 14, 2026, 10:50 am
உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்
June 14, 2026, 10:45 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்
June 13, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
June 13, 2026, 11:35 am
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 13, 2026, 11:12 am
