நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே

நியூ யார்க்:

D பிரிவு ஆட்டத்தில் துருக்கியேவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின.

2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

24 ஆண்டுக்குப் பின் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற துருக்கியேவின் தொடக்கம் ஆட்டங்கண்டது.

"மிகவும் கவலையாக இருக்கிறது. ஆனால் அடுத்து வரும் ஆட்டங்களில் மீண்டு வர நேரம் இருக்கிறது," என்றார் பயிற்றுவிப்பாளர் வின்சென்சோ மோன்டேலா (Vincenzo Montella).

ஆட்டத்தில் வெற்றிபெற்ற  ஆஸ்திரேலியா இப்போது D பிரிவின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பராகுவேக்கு எதிராக 4க்கு 1 என்ற கோல்கணக்கில் வென்ற அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும்  வெள்ளிக்கிழமை (19 ஜூன்) சந்திக்கவிருக்கின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset