நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை அதிர்ச்சி: அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட சோமாலிய நடுவர் ஓமர் அர்தானுக்கு முழு ஊதியம் வழங்க ஃபிஃபா முடிவு

மொகாடிஷு

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) நடுவராகக் கடமையாற்றவிருந்த சோமாலியாவைச் சேர்ந்த பிரபல நடுவர் ஓமர் அப்துல்காதிர் அர்தானுக்கு (Omar Artan), அமெரிக்க குடிவரவுத் துறை அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்த போதிலும், அவருக்கான முழு உலகக் கோப்பை போட்டி ஊதியத்தையும் (Full Tournament Fee) வழங்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா (FIFA) முடிவு செய்துள்ளது.

உலகக் கோப்பைக் கனவு கலைந்தது:

உலகக் கோப்பை வரலாற்றில் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சோமாலியர் என்ற பெருமையைப் பெற்றவர். 

மேலும் இவர் 2025-ஆம் ஆண்டின் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவராகவும் (CAF Referee of the Year) தேர்வு செய்யப்பட்டார்.

உலகக் கோப்பை நடுவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

அவரிடம் முறையான விசா மற்றும் ஆவணங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு காரணங்களை (Vetting Concerns) முன்னிறுத்தி அவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து, மீண்டும் துருக்கிக்கே திருப்பி அனுப்பினர். 

அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஓமர் அர்தான் அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் திடீர் தடையால் உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை ஓமர் அர்தான் இழந்தாலும், பிபிசி (BBC) அறிக்கையின்படி, அவரது கடின உழைப்பையும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவருக்கான முழு நிதியுதவி, ஊதியத்தை கௌரவமாக வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ளது.

உடனே தேடி வந்த அடுத்த பெரிய வாய்ப்பு
 (UEFA Super Cup):

உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோன சில நாட்களிலேயே, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியமா (UEFA) அவருக்கு ஒரு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 12 அன்று சால்ஸ்பர்க்கில் நடைபெறவுள்ள, சாம்பியன்ஸ் லீக் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) மற்றும் ஐரோப்பா லீக் வென்ற ஆஸ்டன் வில்லா (Aston Villa) அணிகளுக்கு இடையிலான மதிப்புமிக்க 2026 யுஇஎஃப்ஏ சூப்பர் கப் (UEFA Super Cup) போட்டியை நடத்தும் தலைமை நடுவராக ஓமர் அர்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset