
செய்திகள் மலேசியா
பாராங்கத்தியால் தாக்கியதில் 11 வயது சிறுவன் மரணம் - லஹாட் டத்துவில் பயங்கரம்
கோத்தா கினபாலு:
மாற்றந்தந்தையின் நண்பர் ஒருவர் பாராங்கத்தியைக் கொண்டு தாக்கியதில் 11 வயது சிறுவன் ஒருவன் மரணம் அடைந்தான்.
இந்த சம்பவம் பெல்டா சஹாபாட் 30 தொழிலாளர்களின் வீடமைப்பு பகுதியில் நிகழ்தது.
காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று டஹாட் டத்து போலீஸ் தலைவர் ரோஹன் ஷா கூறினார்.
கொலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீஸ் படை விரைந்தது. சம்பவ இடத்தில் சிறுவனின் உடல் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிறுவனின் முகம், தலை, கழுத்து பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார். உடற்கூறு ஆய்வுக்காக உடல் லஹாட் டத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ரோஹன் தெரிவித்தார்.
கொலை செய்த நபர் சிறுவனின் மாற்றாந்தந்தையின் நண்பர் என தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.
PAULUS POKA LOLO என்று பெயர் கொண்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am