நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் முயற்சியை ஆதரிக்கிறோம், ஆனால் இணைய மாட்டோம்: கிம்மா

கோலாலம்பூர் :

இந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் மஇகாவின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

ஆனால் மஇகாவுடம் கிம்மா இணைய முடியாது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.

மஇகாவும் மலேசியா மக்கள் சக்தி கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன.

இரு கட்சிகளை இணைக்கும் செயலகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயலகத்தில் இணைந்து செயல்பட மற்ற இந்திய கட்சிகளுக்கும் மஇகா அழைப்பு விடுத்துள்ளது.

மஇகாவின் அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.

ஆனால் மஇகாவுடன் கிம்மா இணைய முடியாது. காரணம் கிம்மா, அம்னோவின் இணைக் கட்சியாக உள்ளது.

அம்னோவில் இருந்து கிம்மா வெளியேற விரும்பவில்லை.

ஆனால் இந்திய சமுதாயத்தின் நலனுக்கான முயற்சிகளுக்கு கிம்மா என்றுமே துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset