நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனிநபருக்கான மாதாந்திர சாரா உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படும்: நிதியமைச்சு

கோலாலம்பூர்:

அடிப்படை ரஹ்மா பங்களிப்பு திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தனிநபருக்கு தகுதிகளுக்கு ஏற்ப 100 ரிங்கிட் வரை மாதாந்திர சாரா உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படும்.

நாடு முழுவதும் சுமார் 3.1 மில்லியன் பெறுநர்கள் இந்த உதவியை பெறவுள்ளதால நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த உதவியை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் அடிப்படைத் தேவைகளை வாங்க பயன்படுத்தலாம்.

21 முதல் 59 வயதுக்குட்பட்ட மொத்தம் 3.1 மில்லியன் தனிநபருக்கு இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மாதாந்திர சாரா உதவி பெற தகுதியுடையவர்கள்.

அதாவது 2,500 ரிங்கிட் முதல், அதற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட 50 ரிங்கிட், அதே நேரத்தில் இ-காசே பெறுநர்களாக பட்டியலிடப்பட்ட அதே வருமான வரம்பைக் கொண்டவர்களுக்கு 100 ரிங்கிட் கிடைக்கும்.

இது அவர்களின் அடையாள அட்டையில் செலுத்தப்படும்.  சாரா பெறுநர்கள் தங்கள் உதவி இருப்பைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனால் பெறப்பட்ட கிரெடிட் அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் அல்லது கூட்டாளர் கடைகளில் அடையாள அட்டையை பயன்படுத்தி சாரா இருப்புச் சரிபார்ப்பை எளிதாகச் செய்யலாம் என்று நிதியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset