நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெகவுடனான ஒத்துழைப்பு "அல்லா"வின் விருப்பமாகும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

ஜசெகவுடனான ஒத்துழைப்பு என்பது "அல்லா"வின் விருப்பமாகும் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

அம்னோ பொதுப் பேரவையுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஜசெகவுடனான ஒத்துழைப்பை "அல்லா"வின் விருப்பம். தேசிய அரசியல் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கான அரசியல் முதிர்ச்சியாகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் அன்வார் வேண்டாம், ஜசெக வேண்டாம் என்று கோஷமிட்டதை அவர்  ஒப்புக் கொண்டார்.

இது கடந்த காலத்தில் கட்சியுடனான தனது பகைமையைக் காட்டியது.

அதே வேளையில் பெர்சத்து இல்லை என்று கோஷமிட்ட போதிலும், 15ஆவது பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கை கூட்டணியின் ஒரு அங்கமான ஜசெகவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது.

ஜசெகவின் ஆட்சேபனை இல்லாமல், தேசிய முன்னணி, அம்னோ கூட அன்வாரின் பெரும் நம்பிக்கையைப் பெற்றதாக டத்தோஶ்ரீ  ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset