நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மறைந்த பூங் மொக்தார் விடுவிக்கப்பட்டார்: ஜிசி மீதான வழக்கு தொடர்கிறது

கோலாலம்பூர்:

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மறைந்த கினா பாத்தாங்கான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பூங் மொக்தார் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு எதிரான வழக்குகளைத் தொடர அரசு தரப்பு விரும்பவில்லை.

இதனால் அவர் எதிர்கொண்ட 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து  இன்று செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

பெல்க்ராவின் முன்னாள் நிர்வாகமற்ற தலைவராகவும் இருந்த மறைந்த பூங் மொக்தார், பொது மியூச்சுவல் யூனிட் டிரஸ்ட்களில் 150 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்ய ஏஜென்சி ஒப்புதல் அளித்தது தொடர்பான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இருப்பினும், ஊழல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ஜிசி இசெட்டே அப்துல் சமத் சமர்ப்பித்த மனுவை அரசு தரப்பு நிராகரித்தது.

அதன்படி ஜிசி இசெட்டே மீதான வழக்கு மார்ச் 5, 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset