நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல் இவ்வாண்டு நடைபெறும்: முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என்பதை மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவூஃப் யூசோ உறுதிப்படுத்தினார்.

தற்போதைய மலாக்கா அரசாங்க நிர்வாகக் காலம் இந்த ஆண்டு முடிவடையும்.

மாநில தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும்.

மலாக்கா அரசாங்க நிர்வாகக் காலம் இந்த ஆண்டு முடிவடையும் என்பதால், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும்.

நேற்று இரவு கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ உச்ச பணிக்குழு சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடைசியாக மலாக்கா மாநில தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி  நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset