நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிக்னல் விதிமீறலால் ஏற்பட்ட விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் மரணம்

ஜித்ரா:

சிவப்பு சிக்னலை மீறி வந்த தாய்லாந்து வேன் ஓட்டுநர் ஒருவர், மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் ஒருவரை மோதி உயிரிழந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று நாபோ சிக்னலில் நிகழ்ந்தது.

கூபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முஹம்மது ரட்ஸி அப்துல் ரஹீம் தெரிவித்ததாவது, இரவு சுமார் 10.15 மணியளவில் டொயோட்டா ஹையேஸ் வேன், மொடெனாஸ் மோட்டார் சைக்கிள் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையில், 60 வயதான வேன் ஓட்டுநர் பேராக் மாநிலம் பந்தாய் ரெமிஸிலிருந்து தாய்லாந்து, நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை அடைந்தபோது, சிவப்பு சிக்னலில் நிற்காமல் இடதுபுற சந்திப்பிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

இந்த விபத்தில், உணவக உதவியாளராக பணியாற்றிய 22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே கடுமையான காயங்களால் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக ஜித்ரா மருத்துவமனையின் நீதியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரணத்திற்கான துல்லிய காரணம் உடற்கூறு அறிக்கை கிடைத்த பின்னரே உறுதி செய்யப்படும்.

காயமின்றி தப்பிய வேன் ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset