நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு சிலாங்கூர் மக்களுக்கு பன்றிப் பண்ணையை விட மருத்துவமனையே தேவைப்படுகிறது: டாக்டர் சத்தியா

உலு சிலாங்கூர்:

உலு சிலாங்கூர் மக்களுக்கு பன்றிப் பண்ணையை விட மருத்துவமனையே தேவைப்படுகிறது.

உலு சிலாங்கூருக்கான நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் இதனை கூறினார்.

புக்கிட் தாகருக்கு பன்றிப் பண்ணைகளை மாற்றுவது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கவனத்தைப் பெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் தலைவர்கள் உலு சிலாங்கூர் தொகுதியில் வளர்ச்சி முன்னுரிமைகளில் அவசரமாகத் தேவைப்படும் சுகாதார வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கால்நடைத் தொழிலை மறுசீரமைக்கும் மாநில அரசின் முடிவை மதிக்கும் அதே வேளையில், மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையின் தேவை மிகவும் முக்கியமானது.

புக்கிட் தாகர் குறித்த மாநில அரசின் முடிவை நான் மதிக்கிறேன்.

ஆனால் உலு சிலாங்கூரில் இப்போது மிக முக்கியமான விஷயம் ஒரு மருத்துவமனை.

நாடாளுமன்றத்தில் வசிப்பவர்கள் நீண்ட காலமாக நெருக்கமான மற்றும் திறமையான மருத்துவ அணுகலுக்காக ஏங்கி வருகின்றனர்.

அதுதான் இங்குள்ள மக்களின் அவசரத் தேவை என்று அவர் கூறினார்.

முன்னதாக, பன்றிப் பண்ணையை உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் அமைந்துள்ள புக்கிட் தாகருக்கு மாற்றுவதற்கான மாநில அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்குமாறு அவரிடம் கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset