
செய்திகள் மலேசியா
அறிவியல் போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனை வியக்க வைக்கிறது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர் :
இந்தோனேசியா, பாலியில் நடந்த அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 சிறப்பு விருதுகளை வென்று சாதனை படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததார்.
மாணவர்கள் தினேஷா ஜெயபிரகாசம், திவாஷினி எல்.ஜெயபாலன், வேலன் சிவகுமார், ஆஷ்ரி குமரேசன், லெனிஷா ரவிசந்திரன், தாரணி மோகன், தனுஸ்ரீ ஜெயசீலன், கிஷோர் ஜெயசீலன், தருணேஷ் ஜெயசீலன் ஆகியோர் செமினி தோட்ட தமிழ்ப்பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.
இப்போட்டிக்கு 9 மாணவர்களைத் தயாரித்து வழி நடத்திய ஆசிரியர்கள் உமா தேவி, ஷாமினி, ராஜம்மாள் அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
அனைத்துலக ரீதியில் புத்தாக்க மற்றும் அறிவியல் போட்டிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள்.
தமிழ் பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பது இது நிரூபிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் பள்ளி மாணவர்களின் சாதனைகள் என்னை வியக்க வைக்கின்றன.
இப்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அனைத்துலக அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am