நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர் விடுதலை

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் விடுவிக்கப்பட்டார்.

2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு  பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கும் அவரது இல்லத்தில் சிறைவைக்கப்பட்டார்.

அதன்பின்னர் பெரும்பாலான தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், உமர் ஃபரூக் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்து வந்தார்.

தன்னை விடுவிக்க கோரி மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகி பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset