
செய்திகள் மலேசியா
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களில் சிலாங்கூர் இடம்பெற்றுள்ளது.
ஷா ஆலம் :
மலேசியாவில் கடந்த ஆண்டு 6.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன், மலேசியாவில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த முதல் மூன்று மாநிலங்களில் சிலாங்கூர் இடம்பிடித்துள்ளது.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டு வரை சிலாங்கூர் 2.9 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ளதாக மாநிலத்தின் சுற்றுலா துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சூய் லீம் கூறினார்.
2022-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40.9 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
இது சுற்றுலாத் துறையை உள்ளடக்கிய சேவைத் துறையில் 26.5 சதவீதத்துடன் சிலாங்கூர் பங்களிப்புள்ளது.
இந்த வளர்ச்சி சாதனையைத் தொடர்ந்து தற்காக்க, மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்குவதற்கு தஅம் தயாராக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
டாருல் எஹ்சான் கட்டடத்தில் சுற்றுலா சிலாங்கூர் ஊழியர்களின் ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
செகின்ஞான் சட்டமன்ற உறுப்பினருமான இங் சூயி லிம், டிசம்பர் மாதம் முடிவதற்குள் சிலாங்கூருக்கு ஐந்து மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தனது தரப்பு இலக்கு கொண்டுள்ளது என்றார்.
இதுவரை சுமார் நான்கு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூருக்கு வருகை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 10, 2025, 1:22 pm
அன்னையின் கருவறை ஆலய கருவறையைவிட சிறந்தது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து
May 10, 2025, 12:44 pm
பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் போட்டியின்றித் தேர்வு
May 10, 2025, 12:26 pm
கெஅடிலானில் எந்தப் பிரிவுகளும் இல்லை; அன்வார் அணி மட்டுமே உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
May 10, 2025, 12:18 pm
விசாகத் தினத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
May 10, 2025, 12:01 pm