நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் : அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

கேஎஸ்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அஹ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.

மற்ற இரு கோல்களை தலிஸ்கா அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளனர்.

மற்ற ஆட்டங்களில் அல் வெஹ்டா, அல் கலீஜ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset