நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை

லண்டன்: 

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் பதவியேற்ற நாளிலிருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

இதில் ஒரு நடவடிக்கையாக அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

இதையடுத்து, இங்கிலாந்தில் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்குப் புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் புகை பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தங்களது லட்சியம் என்றும் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

மேஉம், புகை பிடிப்பவர்களின் விழுக்காட்டைக் குறைக்க ஏற்கனவே பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset