
செய்திகள் இந்தியா
நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை - இஸ்ரோ
பெங்களூரு :
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கருவிகளிலிருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உறக்க நிலையில் வைக்கப்பட்ட அந்தக் கருவிகளை விழிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இஸ்ரோ கடந்த மாதம் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அதில் இருந்த விக்ரம் லேண்டரும், பிரக்யான் எனப் பெயரிடப்பட்ட ரோவர் கருவியும் பத்திரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டன.
இவ்வாறு நிலவில் இரண்டு நாட்கள் (பூமியில் 14 நாட்கள்) ரோவர் ஆய்வு செய்த சூழலில், அங்கு இரவு வரத் தொடங்கியது. சூரிய சக்தியில் இவை செயல்படுவதால் விக்ரம் லேண்டரையும், ரோவரையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உறக்க நிலையில் வைத்தனர்.
இந்நிலையில், இன்று நிலவில் இரவு முடிந்து பகல் வந்தது. சூரிய வெளிச்சம் வந்ததால் விக்ரம் லேண்டரையும், ரோவர் கருவியையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் எழுப்பினர். ஆனால், உறக்க நிலையிலிருந்து அவை விழித்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ரோவரையும், விக்ரம் லேண்டரையும் எழுப்ப தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அந்தக் கருவிகளில் இருந்து இதுவரை சிக்னல் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm