நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய மருத்துவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்

புது டெல்லி:

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பின்  அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் எம்பிபிஎஸ் மாணவர்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தடையின்றி பணிபுரியவும், மருத்துவப் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளவும் முடியும்.

இந்திய முழுவதுமுள்ள 706 மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்கு கீழ் வந்துவிடும்.

இந்த அங்கீகாரம் மூலம், இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் மேம்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset