
செய்திகள் மலேசியா
மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் தேர்தலுடன் நடைபெறுகிறது: டத்தோ ரசூல்
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம்
தேர்தலுடன் நடைபெறுகிறது என்று அதன் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
சங்கத்தின் 28ஆவது ஆண்டுக் கூட்டம் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தலைநகர் ஷெரட்டன் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழகத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இந்த கூட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளார்.
மேலும் பல முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கி இந்த ஆண்டு கூட்டம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு, சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும் பல ஆண்டுகளாக நாம் எதிர்நோக்கி வந்த அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தற்போது அரசாங்கம் ஒரு தீர்வை வழங்கியுள்ளது.
இருந்தாலும் இந்த தொழிலாளர்களை பெறுவது எப்படி, அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட உள்ளது.
அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்கள் உட்பட இதர விவகாரங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எப்படி பெறுவது என்பது குறித்து இங்கு உள்ள இந்திய தூதரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
அதற்கான விபரங்களும் இந்த ஆண்டு கூட்டத்தின் போது வழங்கப்படும்.
ஆகவே, பேராளர்கள் திரளாக வந்து இந்த கூட்டத்தில் கலந்து பயன்பெற வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2025, 3:37 pm
ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு
April 28, 2025, 2:12 pm
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
April 28, 2025, 12:47 pm
கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்
April 28, 2025, 12:22 pm
அலோர்ஸ்டாவில் மர்மக் கிருமித் தொற்று தாக்கியதில் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிப்பு
April 28, 2025, 11:29 am