நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

27 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது

போர்ட்டிக்சன்: 

2020-ஆம் ஆண்டு மற்றும் இவ்வாண்டின் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட 27 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 1,301 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை மலேசிய கடற்போக்குவரத்து அமலாக்கத் துறை (APMM) அப்புறப்படுத்தியது. 

கெடா, பெர்லிஸ், ஜொகூர் மாநிலங்களில் உள்ள கடல்சார் பகுதிகளில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மலேசிய கடற்போக்குவரத்து அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் கைருல் அன்வார் பச்சோக் தெரிவித்தார். 

அதிகாரப்பூர்வ நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகு கஞ்சா, ஹெராயின், மார்பின், மெத்தம்பேட்டமைன் மற்றும் மெத்திலினெடியோக்சி-மெத்தாம்பேட்டமைன் (எம்டிஎம்ஏ) போன்ற பல வகையான போதைபொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

அண்டை நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள், லங்காவி தீவு, பினாங்கு தீவு உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில், APMM ரோந்து மற்றும் அமலாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று கைருல் அன்வார் கூறினார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset