நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ்  ஷெரீஃப்

லாகூர்:

சந்திரயான்3 மூலம்  நிலவில் இந்தியா கால்பதித்துவிட்டது, ஆனால் உலக நாடுகளிடம்
பணத்துக்கு கையேந்தும்  நிலைக்கு பாகிஸ்தான் உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் முறைகேடு குற்றச்சாட்டில் 2017இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், 2019இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்று அங்கேயே வசித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன்பு  நவாஸ் ஷெரீஃப் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் லண்டனிலிருந்து  காணொலி வாயிலாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. நாட்டில் பணவீக்கம் இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

2017இல் நான் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சதியால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டேன். அவர்கள் செய்தது கொலைக் குற்றத்தைவிட பெரிய குற்றமாகும். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், அது நம் தேசத்துக்கு இழைக்கும் அநீதியாகும். ஒருபுறம் பாகிஸ்தான் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம் இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்புகின்றது.

வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றபோது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சில பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் தற்போது 600 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. ஐஎம்எஃப்-யிடம் 1.2 பில்லியன் டாலர்கள் கடனைப் பெறும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுவிட்டது.அக்டோபர் 21ம் தேதி தாயகம் திரும்பவுள்ளேன் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset