நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?

லண்டன்:

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா தீவிரமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், இந்தியாவுடனான வர்த்தக பேச்சு பாதிக்கப்படாது என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இதை இந்தியா அவசர அவசரமாக மறுத்துள்ளது. இரு நாடுகளின் உறவுகளிலும் இந்தப் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் லண்டனில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் , இந்த விவகாரம் தொடர்பாக கனடா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். கனடா கூறியுள்ளது மிகவும் தீவிரமான

குற்றச்சாட்டாகும். ஆதாரங்கள் இல்லாமல் கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் இந்தியா மீது குற்றம் சட்டமாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். 

இந்த விவகாரத்தால் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது. அது முன்புபோல தொடரும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset