நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நியூசிலாந்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

வெல்லிங்டன் :

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரிலிருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset