
செய்திகள் விளையாட்டு
உலகக்கோப்பை பாடலில் ரன்வீர் சிங்குடன் சாஹல் மனைவி - இன்று ஐசிசி வெளியிடுகிறது
மும்பை:
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சாஹலை எடுக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சாஹல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் ஆட தெரிந்த சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால் சாஹல் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் கலந்து கொள்ள சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு அவரது மனைவி தனஸ்ரீ வர்மாக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிடவுள்ளது.
இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிறந்த நடனக்கலைஞரான தனஸ்ரீ வர்மா உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி வெளியிடும் பாடலில் ரன்வீர் சிங்குடன் நடனம் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனஸ்ரீ வர்மா பிரபல யூடியூபர் ஆவார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். தனது யூடியூப் சேனலில் நடனம் ஆடி அதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.
சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூடியூபில் பிரபலமானவராக இருந்தார். சுமார் 55 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am