நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவை காப்போம் பேரணி: 11 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர் :
மலேசியாவை காப்போம் பேரணி தொடர்பில் 11 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனை டாங் வாங்கி போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

கடந்த சனிக்கிழமை தலைநகரில் தேசியக் கூட்டணி ஏற்பாட்டில் பேரணி ஒன்று நடைபெற்றது.

குறிப்பாக ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

அனுமதி இல்லாத வீதிப் பேரணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 நபர்களை காவல்துறையினர் அடையாளம்  கண்டுள்ளனர்.

இந்த 2 பேரில் 11 பேரிடம் போலீடார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மற்றவர்களிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset