நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாஹிட் விவகாரத்தில் லிம் கிட் சியாங்கின் நடவடிக்கை ஆச்சிரியமாக உள்ளது: கைரி

கோலாலம்பூர் :
ஜாஹிட் விடுவிக்கப்பட்டது  தமக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல் தலைவர் இதை  மட்டுமே சொல்ல முடியுமா என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பினார்.

அகால்புடி ஊழல் வழக்கில் இருந்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டார்.

அவர் விடுவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அவர் விடுவிக்கப்பட்டது தமக்கும் அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அளிக்கிறது என கூறியிருந்தார்.

லிம் கிட் சியாங்கின் இந்த நடவடிக்கையை கைரி கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பான ஊழலுக்கு எதிராக பேசியவர், அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவர் இதை மட்டும் தான் பேச முடியுமா.

அவர் வெளியிட்ட அறிக்கையில் ஓர் வரியில் தான் ஜாஹிட் விவகாரம் பற்றி உள்ளது.

புதிய அரசியல் நண்பர்களை ஆதரவளிக்கும் வகையில் அவரின் அறிக்கை உள்ளது.

அவரின் செயல் எனக்கு தான் ஆச்சரியமாக உள்ளது என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset