நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

23 வயது கீழ்ப்பட்ட தேசிய காற்பந்து அணியின் தலைமை பயிற்றுநர் பொறுப்பிலிருந்து E.இளவரசன் ராஜினாமா 

கோலாலம்பூர்: 

23 வயது கீழ்ப்பட்ட தேசிய காற்பந்து அணியின் தலைமை பயிற்றுநர் பொறுப்பிலிருந்து E. இளவரசன் ராஜினாமா செய்துள்ளார்.

தேசிய காற்பந்து அணியின் உதவி பயிற்றுநராக தமது பணிகளைத் தொடரவிருப்பதால் அவர் இந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக மலேசிய காற்பந்து சங்கமாக FAM ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி இளவரசன் இந்த தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டர். ப்ரெட் மலோனிக்குப் பதிலாக அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

கிம் பான் கோ தலைமையிலான தேசிய அணியின் நிர்வகிப்பில் உதவி பயிற்றுநராக இருந்த அவர் இந்த பொறுப்பிற்கு நியமிக்கபட்டார். 
தற்போது தேசிய அணிக்கு உதவும் பொருட்டு அவர் இதிலிருந்து விலகியுள்ளார். 

சிங்கப்பூரில் நடந்த மெர்லியோன் கிண்ண காற்பந்து போட்டியில் இவரின் தலைமையில் மலேசியா அணி வாகை சூடியது. B23 AFF  2023 கிண்ண போட்டியிலும் அரையிறுதி சுற்றுவரை இளவரசன் மலேசிய அணியைக் கொண்டு சென்றார். 

இவ்வேளையில் இளவரசனுக்கு மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஹமிடின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset