நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோவிட் 19 பெருந்தொற்றின் மூலத்தை சீனா அரசு வழங்க வேண்டும்; உலக சுகாதார நிறுவனம் நெருக்குதல் 

வாஷிங்டன்: 

கோவிட் 19 பெருந்தொற்றின் மூல தகவல்களை  கூடுதலாக சீன அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. 

இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கூறினார். 

உருமாறிய கொரோனா தொற்றின் அண்மைய தகவல்கள் மற்றும் தடுப்பூசியின் போக்குகள் குறித்து மருந்தக நிறுவனங்கள் தகவல் கேட்கும் பட்சத்தில் சீனா கொரோனா தொடர்பான முழு விபரங்களையும் அது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

முன்னதாக, 2019ஆம் ஆண்டு சீனா நாட்டின் வுஹான் மாகாணத்தில் முதன்முறையாக கோவிட் 19 பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த கொல்லை நோயினால் உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset