செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் படுதோல்வி கண்டனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.
சொந்த அரங்கில் களமிறங்கி படுதோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகிறது.
லண்டன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை எர்லிங் ஹாலண்ட், பெர்னாண்டோ சில்வா, டோகு ஆகியோர் அடித்தனர்.
மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், புல்ஹாம், அஸ்டன் வில்லா, நியூகாஸ்டல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2024, 9:15 am
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியது எதிர்கால வெற்றிக்கான நம்பிக்கையைத் தருகிறது: கேரத் சவுத்கேட்
September 12, 2024, 8:48 am
ரியல்மாட்ரிட் தான் மிகச் சிறந்த கால்பந்து கிளப்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
September 11, 2024, 8:40 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா தோல்வி
September 11, 2024, 8:11 am
ஐரோப்பா தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 10, 2024, 5:06 pm
உலகப் பூப்பந்து தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் Lee Zii Jia
September 10, 2024, 12:53 pm
டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்- கோகோ காப் பின்னடைவு
September 10, 2024, 9:06 am
கால்பந்து உலகில் ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஹாரி கேய்ன் விருப்பம்
September 10, 2024, 8:40 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 9, 2024, 11:13 am