நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி: பவன் கல்யாண்

ராஜமகேந்திரவரம்:

ஆந்திர மாநிலத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரவரம் சிறையில் பவண் கல்யாண் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பவன் கல்யாண் கூறியதாவது:

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளேன். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் இணைந்து ஜனசேனை கட்சி போட்டியிடும்.
சந்திரபாபு நாயுடுவை வேண்டுமென்றே பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆந்திரத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பேரவைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset