
செய்திகள் மலேசியா
பத்துமலையில் நான்காவது தமிழ்ச் சமய மாநாடு ; தமிழர்கள் பண்பாட்டு உடையில் திரண்டு வாருங்கள்
பத்துமலை :
பத்துமலையில் நடைபெறவிருக்கும் நான்காவது தமிழ்ச் சமய மாநாட்டுக்குத் தமிழர்கள் பாரம்பரிய உடையில் திரண்டு வருமாறு மாநாட்டு ஒருங்கினைப்பாளர் தலைவர் வீ. பாலமுருகன் கூறினார்.
மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டிலான இம்மாநாடு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு, உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து, பகுத்து வகுத்து அமைத்த, தமிழ்ச்சமய நிலைகளின் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளைக் கடைபிடித்துக் கற்பிக்கப்பட்டதை, வழி வழியே காத்தும் பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை களம் கண்டு வருகிறது.
அவ்வகையில் அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தைக் காத்துத் தாய்த்தமிழிலேயே வழிபாடு எனத் தமிழ்ச்சமய தொன்மையைப் பறைசாற்றுவதோடு தமிழ்ச்சமயம் தமிழரின் தாய்ச்சமயம் எனும் கருப்பொருளில் ஆய்வு விளக்கத்தோடு இம்மாநாடு அரங்கேற இருக்கிறது.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு வருகையாளராக பத்துமலை திருத்தல தலைவரும் தமிழ்ச்சமய மறுமலர்ச்சி ஆர்வலருமான டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவும் தமிழ்நாட்டிலிருந்து செந்தமிழ் வேள்விச் சதூரர், முதுமுனைவர், தமிழ்ச்சமய பேரறிஞர் சக்திவேல் முருகனார், தமிழியல் பேரறிஞரும் மூலப் பெருந்தமிழ் மரபு தந்தையுமான தமிழ்த்திரு இர. திருச்செல்வனார், சைவத்தமிழ்ப் பேரறிஞரும் திருமுறைச் செம்மலுமான தமிழ்த்திரு ந.தர்மலிங்கனார், தமிழிறை ஆய்வு முனைவர் இளஞ்சோதியார், தமிழர் தேசிய சிந்தனை வழக்கறிஞர் தமிழ்த்திரு பாலமுரளினார் ஆகியோர்கள் பேருரையுடன் தமிழ்ச்சமய பரந்துரை, காணொளிகளும் இடம்பெறும்.
எனவே, இலவசமாக நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு நாட்டிலுள்ள தமிழர் தேசிய இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், தமிழ்ச்சமய ஆர்வளர்கள், பற்றாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பண்பாட்டு உடையில் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவை அன்புடன் அழைக்கிறது.
புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களுக்காக பேரவையின் முகநூல் மற்றும் வலையொளி தளத்தில் நேரலையும் இடம் பெறும் என்று அவர் கூறினார்.
முகநூல் இணைப்பு: https://www.facebook.com/permalink.php?story_fbid=114584374299888&id=100072449785453
வலையொளி இணைப்பு மீண்டும் யோசி / Meendum Yosi
https://youtube.com/@meendumyosi?si=t-IFiXDRHsSYPmHv
தொடர்புக்கு : மு.ஆனந்த தமிழன் +60149327025 / வீ.பாலமுருகன் +60143099379
தொடர்புடைய செய்திகள்
October 8, 2025, 6:37 pm
லெவி உயர்த்தப்பட்டால் உணவகத் தொழில் பாதிக்கும்; 15,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை: டத்தோ ஜவஹர் அலி
October 8, 2025, 3:28 pm
ஆலயங்களுக்கான நிதி விவகாரத்தில் அரசு சாரா இயக்கம் ஏன் வங்கியாக மாற வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன் கேள்வி
October 8, 2025, 12:55 pm
கேப்டன் பிரபா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் 13 உறுப்பினர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது
October 8, 2025, 12:53 pm
23 ஜிஎஸ்எப் தன்னார்வலர்களுக்கு புதிய கைத்தொலைபேசிகளை ஃபஹ்மி அன்பளிப்பாக வழங்கினார்
October 8, 2025, 11:46 am
கிளந்தானில் உள்ள 5 தங்குமிடப் பள்ளிகளில் 514 இன்ஃப்ளூயன்ஸா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன
October 8, 2025, 11:30 am