செய்திகள் மலேசியா
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
கோலாலம்பூர்:
செராஸ் பகுதியில் உள்ள ஏரியில் குதித்த வெளிநாட்டு பெண் ஒருவர் மூழ்கி உயிரிழந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தூதரக அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது:
இந்த சம்பவம் தொடர்பாக மாலை 4.35 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பண்டார் துன் ஹுசைன் ஒன் தீயணைப்பு நிலையத்திலிருந்து குழு 4.39 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தது.
முப்பது வயதிற்கு அருகிலுள்ள இந்தோனேசிய பெண் ஒருவர், தூதரக அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஏரியில் குதித்ததாக நம்பப்படுகிறது.
முதலில் நீர்மேல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் நீர்மூழ்கி மீட்புக் குழு இரவு 10.10 மணிக்கு நீரில் மூழ்கிச் தேடுதல் மேற்கொண்டது.
ஒன்பது நிமிடங்களில், ஏரிக்கரையிலிருந்து சுமார் ஆறு மீட்டர் தொலைவில், மூன்று மீட்டர் ஆழத்தில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட அவரை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேலதிக விசாரணைக்காக அவரது உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:54 am
