செய்திகள் மலேசியா
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
ஜொகூர் பாரு:
நேற்று காலை ப்ளென்டோங், மாசாய் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், குப்பைத்தொட்டிக்குள் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று காலை 8.45 மணியளவில் அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹம்மத் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
“அந்தக் குழந்தை உடை இன்றி பிளாஸ்டிக் பையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்தக் குழந்தை முழுமையான உடல் அமைப்புடன் உயிருடன் இருந்தது என்று சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் (HSI) மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தையைத் திட்டமிட்டு கைவிடும் நோக்கில் விட்டு சென்றதாகக் கருதி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 317 கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“இந்த வழக்குடன் தொடர்புடைய ஏதேனும் தகவல்கள் இருந்தால், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஹனிஸ் முஹம்மத் நஃபிபியை 018-7718919 என்ற எண்ணில் அல்லது ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல் தலைமையக ஹாட்லைன் 07-3864222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 9:55 am
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
March 10, 2026, 9:54 am
