செய்திகள் மலேசியா
சர்வதேச மோசடிக் கும்பல் கைது: கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்
புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சீன அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில், சர்வதேச அளவில் செயல்பட்ட ஒரு பெரிய மோசடி கும்பலை வெற்றிகரமாக கைது செய்தனர்.
“டிராகன் நடவடிக்கை” எனப் பெயரிடப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் சீன குடியினரால் வழிநடத்தப்பட்ட மோசடி வலையமைப்பை இலக்காகக் கொண்டது.
இந்த கும்பல் பல்வேறு தகவல் தொடர்பு, தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முஹம்மத் ஜம்ரி ஜைனுல் ஆபிதீன் தெரிவித்ததாவது, தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் பதுங்கியிருந்த முக்கிய தலைவர்களாகக் கருதப்படும் 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், சட்டவிரோத சேகரித்த பல சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஆடம்பர கார்கள், நகைகள், தங்கக் கட்டிகள், தனிநபர் கணினிகள், மடிக்கணினிகள், பல்வேறு வெளிநாட்டு நாணயங்களில் பணம், நூற்றுக்கணக்கான கைப்பேசிகள் அடங்குகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு பல கோடி ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சட்டப்படி அவற்றை அரசுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வெற்றி, சர்வதேச அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பொருளாதார குற்றங்கள், எல்லை தாண்டிய மோசடிகளை எதிர்க்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உறுதியை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நிதி அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், ஊழல், மோசடி நடவடிக்கைகள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:55 am
