செய்திகள் உலகம்
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் - ஐ.நா.
நியூயார்க் :
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய அதிபர் என்பதற்கு பதிலாக பாரத அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரைப் பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரைப் பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ''கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரைத் துருக்கியே என மாற்றுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம்.
அதுபோலவே இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்" என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm