
செய்திகள் வணிகம்
கச்சா எண்ணெய் விலை உயருகிறது: உற்பத்தியை குறைக்க சவூதி - ரஷியா முடிவு
மாஸ்கோ:
நிகழாண்டு இறுதிவரையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 13 லட்சம் பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளன.
இதனால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது.
இது குறித்து சவூதி அரேபிய நாட்டு எஸ்பிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மையையும், சமநிலையையும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை OPEC எடுத்து வருகிறது.
தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் 13 லட்சம் பேரலைக் குறைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகும், கச்சா எண்ணெய்ச் சந்தை நிலவரத்தை சவூதி அரேபிய அரசு உன்னிப்பாக கவனித்து வரும். அதன் அடிப்படையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய துணைப் பிரதமரும், அந்த நாட்டின் எரிசக்தித் துறை முன்னாள் அமைச்சருமான அலெக்ஸாண்டர் நோவாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உறுதி செய்வதற்கான ஒபெக் நடவடிக்கைளுக்கு வலு சேர்க்கும் வகையில், தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் 13 கோடி பேரலைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.
தற்போது தினமும் செயல்படுத்தப்பட்டு வரும் 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையும் தொடரும் என்றார் அவர்.
இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am