நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில இடைத்தேர்தல் தேசிய கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் - பாஸ்

மூவார் : 

சிம்பாங் ஜெராம் சட்டமன்ற, பூலாய் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப்டமர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இந்த இரு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தேசியக் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பு இருப்பதாக ஜொகூர் மாநில பாஸ் கட்சியின் தேர்தல் ஆணையர் அப்துல்லா ஹுசேன் கூறியுள்ளார்.

தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாஸ் நிச்சயம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கடந்த 13-ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி ஜொகூர் மாநிலத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

தற்போது பாஸ் கட்சி வசம் ஒரு சட்டமன்றத் தொகுதி இருக்கின்றது. 

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத் தொகுதிக்கான எண்ணிக்கையைப் பாஸ் கட்சி கூட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset