நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

எட்டு மாதங்களில் 100,000 கார்களை புரோட்டோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது

சுபாங் ஜெயா: 

தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 100,000 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் 13,955 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 104,602 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனையை விட 19.6 சதவீதம் அதிகமாகும். அதாவது 17,121 கார்கள் கூடுதலாக விற்கப்பட்டுள்ளன. 

கடந்த மாதம் புரோட்டோனின் பங்கு சந்தை சுமார் 18.8 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை பங்கு சந்தை எண்ணிக்கை 20.8 விழுக்காடாக இருந்தது. 

இவ்வாண்டு மலேசிய வாகனத் துறை ஒரு புதிய சாதனையைப் படைத்தது. புரோட்டோன் மற்றும் மற்ற நிறுவனங்களின் கார்கள் தொடர்ந்து விற்பனையில் போட்டியிடுவதாக புரோட்டோன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரோஸ்லான் அப்துல்லாஹ் கூறினார்.  

வாங்குபவர்களின் நம்பிக்கையும் நேர்மறையான பார்வையும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்புகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.

மேலும், பல மாடல்கள் டிசம்பர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சந்தை நிலைமைகள் மிகவும் போட்டித் தன்மையுடன் இருக்கும் என்று புரோட்டான் எதிர்பார்க்கிறது.

கடந்த மாதம்  719 புரோட்டோன் X90 வகை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை மொத்தம் 2,944 கார்கள் விற்பனையாகியுள்ளன. 

கடந்த மாதம் 2,558 புரோட்டோன் X50 கார்கள் விற்பனையாகி B பிரிவு SUV சந்தையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 22,750 புரோட்டோன் X50 கார்கள் விற்பனையாகி முழு SUV சந்தையிலும் முன்னணியில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 409 புரோட்டோன் எக்ஸோரா கார்கள் விற்கப்பட்ட நிலையில் இதுவரை 3,150 கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதற்கிடையில், இவ்வாண்டு ஆறாவது முறையாக புரோட்டோன் பெர்சோனா கார்களின் எண்ணிக்கை 2,000 மேல் விற்பனையை எட்டியுள்ளது. கடந்த மாதம் 2,028 கார்கள் விற்கப்பட்டன.

ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 16,561 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 72 சதவீதம் அதிகமாகும்.

செடான் பிரிவில் புரோட்டோன் பெர்சோனா கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் புரோட்டோன் சாகா சிறந்த விற்பனையான புரோட்டோன் மாடலாக இருந்துள்ளது. மொத்தத்தில் 6,585 புரோட்டோன் சாகா கார்கள் விற்பனையாகியுள்ளன.

இஃது இந்த ஆண்டின் அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையை எட்டியதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மலேசியாவில் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 

முதல் எட்டு மாதங்களில், மொத்தம் 6,585 புரோட்டோன் சாகா கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் விற்பனையோடு ஒப்பிடும்போது 34.2 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த மாதம் 654 புரோட்டோன் ஐரீஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதன் விற்பனை பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset