நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு 

கோலாலம்பூர்:

இன்று காலை 9 மணி வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. 

மலேசிய ரிங்கிட்  4.6615 வெள்ளியிலிருந்து 4.6715 வெள்ளிக்கு சரிவடைந்துள்ளது. 

அமெரிக்க கருவூலத்தின் அதிக வருவாயானது வளர்ந்து வரும் மற்ற நாணயங்களுக்கான தேவையைப் பாதித்துள்ளதாக மூவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித் தலைவர் டாக்டர் முகமது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார். 

மலேசிய ரிங்கிட், யூரோவிற்கு எதிராக 5.0088/0131 இலிருந்து 5.0074/0122 ஆக உயர்ந்துள்ளது.  

ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.1670/1699 இலிருந்து 3.1611/1644 ஆக உயர்வடைந்துள்ளது. 

இருப்பினும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.8660/8717-இருந்து 5.8534/8585-ஆக குறைந்துள்ளது. 

மற்ற ஆசிய நாணனயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset