நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜி 20 - இந்தியா செல்வதை தவிர்த்தார் ஷி ஜின்பிங்

பெய்ஜிங்:

தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக  அந்நாட்டு பிரதமர் லீ கியாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மாநாட்டில் கலந்து கொள்ளும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துவருகிறது.

இந்த நாடு தில்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன், ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஜி20 மாநாட்டிலும் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்தாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset