நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மதுரை ரயிலில் தீ விபத்து: 10 பேர் உயிரிழந்தனர் 

சென்னை: 

மதுரை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டிகளில் இன்று காலை ஏற்பட்ட கொடிய தீ விபத்தில், அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 பயணிகள் உயிரிழந்திருக்கிறார்கள்,  மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அருகே நடந்த ரயில் தீ விபத்து தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதுரைக்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்தோர் இருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர். 

இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 5:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அதன்படி அதன்படி

*மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

*ரயில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

*தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

*தீவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல்; பாதுகாப்பு விதிகளைமுறையாக பின்பற்றவேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset