நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து வந்துசேர்ந்ததும் தக்சின் கைது செய்யப்படுவார்

பேங்காக்:

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத், 74, செவ்வாய்க்கிழமை அவரது தனியார் விமானத்திலிருந்து டோன் முவாங் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் காவல்துறையையும் சீர்திருத்தத் துறையையும் சேர்ந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்வர் என்று தகவல்கள் கூறியுள்ளன.

தக்சினின் கடைசி மகள் பெதொங்தார்ன் ஷினவாத் தமது தந்தையை செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு விமான நிலையத்தில் சந்திக்கப்போவதாக இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

தக்சின் நீதிமன்றச் செயல்பாட்டு நேரத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தால் காவல்துறையையும் சீர்திருத்தத் துறையையும் சேர்ந்த அதிகாரிகள் மாற்றுத் திட்டம் ஒன்றையும் வைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீதிமன்றச் செயல்பாட்டு நேரத்திற்குள் வந்து சேர்ந்தால், அவர் முதலில் உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். 

பின்னர் அவர் பேங்காக் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.

தக்சின் பேங்காக் சிறைச்சாலையிடம் ஒப்படைக்கப்பட்டதும் அவர் சிறைக் கைதியாகப் பதிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் பத்து நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்.

தக்சின் முதிய வயதில் இருப்பதால் அவருக்கு அணுக்கமான மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுமா என்பதைச் சிறைச்சாலை மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள். 

அவருக்கு நாட்பட்ட நோய் ஏதாவது இருந்தால், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட வேண்டுமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset