நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பயனர்கள் மற்றவர்களை முடக்கும் வசதி விரைவில் நீக்கப்படும் - எலான் மஸ்க் 

கலிப்போர்னியா : 

எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனர்கள் மற்றவர்களை முடக்குவதற்கான வசதி விரைவில் நீக்கப்படவுள்ளது. எக்ஸ் தளத்தின் புதிய உரிமையாளர் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். ஒருவரை முடக்குவது அல்லது அன்-மியூட் செய்வது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த எலான் மஸ்க் இந்த தகவலைத் தெரிவித்தார்.

தகவல்களில் வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, தனி அம்சமாக இருக்கும் முடக்கம் நீக்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தில் எந்த அர்த்தமும் இல்லை என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

டிவிட்டர் தளத்தில் மற்ற அக்கவுன்ட்களுடன் எப்படி உரையாடுகின்றீர்கள் என்பதை சிறப்பாக கட்டுப்படுத்த முடக்கம் செய்யும் அம்சம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட கணக்குகளைத் தங்களைத் தொடர்பு கொள்வது, டிவீட்களைப் பார்ப்பது மற்றும் தொடர்வது உள்ளிட்டவைகளைத் தடுக்க செய்கிறது. தளத்தில் தங்களை யாரேனும் தவறாகத் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் போது, அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.

எக்ஸ் தளத்தில் பயனர்கள் முடக்கம் செய்வதற்கு பதிலாக, மியூட் செய்யும் அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். புதிய அறிவிப்பின் படி பயனர்கள் தொடர்ந்து கணக்குகளை மியூட் செய்யவும், மெசேஜ்களில் முடக்கம் செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset